வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமின் கச்சார் பகுதியை ஐஏஎஸ் அதிகாரி கீர்த்தி ஜல்லி பார்வையிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த துணை கமிஷனரை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். போர்கோலா வளர்ச்சித் தொகுதி மற்றும் பிற பகுதிகளின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை ஜல்லி பார்வையிட்டார். படங்களில், ஜல்லி சேலை அணிந்து சேறும் சகதியுமான பகுதிகளில் வெறுங்காலுடன் நடப்பதைக் காணலாம். நடைமுறை சிக்கல்களை மதிப்பிடுவதற்காக தாழ்வான பகுதிகளுக்குச் செல்ல விரும்புவதாக ஜல்லி கூறினார். எதிர்காலத்திற்கான சிறந்த திட்டங்களை உருவாக்க நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இது உதவும் என்றும் அவர் கூறினார். மாவட்ட ஆட்சியர் தங்கள் கிராமங்களுக்குச் செல்வது இதுவே முதல் நிகழ்வு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் முழு வீடியோவை பார்க்கவும்.