ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் குற்றவாளிகளை நீதிக்கு கொண்டு வர தற்போதைய அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தீவிரவாதத்தை பரப்பும் பல நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர உறுதிப்படுத்தினார்.
அரசு தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் அமைச்சர் இதைக் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட 75 க்கும் மேற்பட்ட நபர்களும், தீவிரவாதத்திற்கு நிதியளித்தவர்களும், தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பியவர்களும் தடுப்புக்காவல் உத்தரவுகளில் விசாரிக்கப்படுவதாகவும், ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட 32 நபர்கள் உட்பட 211 பேர் ரிமாண்ட் காவலில் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, ஈஸ்டர் தாக்குதல் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தீவிரவாதத்துடன் தொடர்புடைய 54 நபர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர், இதுவரை அவர்களில் 50 பேர் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.